கழிவறை குழிக்குள் விழுந்து மீனவர் சாவு
பாம்பனில் கழிவறை குழிக்குள் விழுந்து மீனவர் இறந்தார்.
ராமநாதபுரம்
பாம்பன் தைக்கா தெருவை சேர்ந்தவர் கனி (வயது 45) மீனவர். நேற்று மீன் பிடிக்க சென்று விட்டு படகில் இருந்து இறங்கி பாம்பன் கடற்கரையில் வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கடற்கரை அருகே இருந்த கழிவறை குழியில் (செப்டிக் டேங்க்) விழுந்து உள்ளார். குழியில் விழுந்த இவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரது உடலை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story