5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்


5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் மீன் பிடிக்க சென்ற  மீனவர்கள்
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

காற்றழுத்த தாழ்வு நிலை

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக அப்பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகர்ந்ததால் ராமேசுவரம் பகுதியில் உள்ள மீனவர்கள் நேற்று முதல் மீன் பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

2 ஆயிரம் மீனவர்கள்

அதைத்தொடர்ந்து 5 நாட்களுக்கு பின்னர் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அதன்படி ராமேசுவரத்திலிருந்து நேற்று மீன் துறை அலுவலகத்தில் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் இன்று காலை கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பாம்பன், தனுஷ்கோடி, ராமேசுவரம் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்களும் வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.


Next Story