கடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


கடல்சீற்றம் காரணமாக  மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T00:16:26+05:30)

கடல்சீற்றம் காரணமாக கடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மயிலாடுதுறை

தரங்கம்பாடி, பொறையாறு, செம்பனார்கோவில், இலுப்பூர், சங்கரன்பந்தல் பரசலூர், விளநகர் தில்லையாடி, விசலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. தரங்கம்பாடி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தியுள்ளனர். தரங்கம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தடுப்பு சுவரை தாண்டி அலைகள் ஆக்ரோஷமாக கரை பகுதியை தாக்கி வருகிறது.


Next Story