தஞ்ைச மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


தஞ்ைச மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x

தஞ்ைச மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தஞ்சாவூர்

இன்று(சனிக்கிழமை) மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களது விசைப்படகுகளை துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம்

மீன் இனப்பெருக்க காலம் எனக்கூறி மத்திய, மாநில அரசுகள் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை 45 நாட்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடைவிதித்து வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்்தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதித்து நடைமுறைபடுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உள்பட ஒட்டு மொத்த மீனவர்களும் பாதிக்கப்பட்டனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

இந்தாண்டு ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 15-ந்தேதி வரை ஒரு மாதமும் இயற்கை சீற்றம் ஏற்படும். நவம்பர், டிசம்பர் வரை ஒரு மாதமும் தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டும். தடைக்காலத்தை 45 நாட்களாக குறைக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை நிராகரித்த மத்திய-மாநில அரசுகள் வழக்கம்போல் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இன்று(சனிக்கிழமை) முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 146 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு

இதன் காரணமாக தங்களது விசைப்படகுகளையும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். இதனாால் மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், மீன்வியாபாரிகள், துறைமுகங்களில் கடைவைத்து தொழில் நடத்துபவர்கள், கருவாடு வியாபாரிகள், ஐஸ் கம்பெனி உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர்.


Next Story