கடலில் மலர் தூவி மீனவர்கள் அஞ்சலி


கடலில் மலர் தூவி மீனவர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 27 Dec 2022 1:01 AM IST (Updated: 27 Dec 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

கடலில் மலர் தூவி மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை

கோட்டைப்பட்டினம்:

தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையால் கடலோர பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் இறந்தனர். இந்த சம்பவம் மறையாத சுவடாகி விட்டது. மேலும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 26-ந் தேதி மீனவர்கள் சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் மீனவர்கள், சுனாமியின்போது இறந்த தங்கள் உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கடல் பகுதிக்கு சென்று, கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Next Story