மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மீனவ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மீனவ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் முத்துமாரி முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், தேசிய குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சமுத்திரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கலெக்டர் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் நாள் நடத்த வேண்டும். மீனவ தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை இருந்தும் கொரோனா நிவாரண நிதி வழங்காமல் உள்ளது. ஆதலால் உடனே வழங்க வேண்டும். மீனவ தொழிலாளர்கள் அனைவரையும் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் ஆக்க வேண்டும். கடலுக்கு செல்லும் மீனவர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ தொழிலாளர்களையும் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.