சென்னை மெரினா லூப் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு


சென்னை மெரினா லூப் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு
x

சென்னை மெரினா லூப் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை

சென்னை மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 18-க்குள் தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மீன் விற்பனை கடைகளை இன்று காலையில் இருந்தே அகற்றும் பணியில் மாநகரட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலையில் மீன்கள் மற்றும் நண்டுகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினருடன் இணைந்து சென்னை மாநகராட்சி பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story