மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்-நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை


மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்-நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை
x

கடலை மட்டும் நம்பி வாழக்கூடிய மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கே.நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

கடலை மட்டும் நம்பி வாழக்கூடிய மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கே.நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

வரவேற்கத்தக்கது

சத்தீஸ்கர் மாநில மலைவாழ் மக்கள்-அரசியல் சாசன திருத்த மசோதா மீது ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி எம்.பி கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருக்கக்கூடிய சத்தீஸ்கரில் மகாரா சமூகத்தினரை மலைவாழ் பட்டியலில் சேர்ப்பது வரவேற்கத்தக்கது. இந்த மசோதாவை வரவேற்கிறேன். இந்த நேரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியால் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர் சமூகத்தை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்த்தமைக்காக மத்திய அரசுக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும், மத்திய மந்திரி அர்ஜுன்முண்டாவுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் பல ஆண்டுகளாக தங்களையும் மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய அரசு விரைவில் அவர்களை அந்த பட்டியலில் இணைக்க பரிசீலிக்க வேண்டும்.

மீனவர்களையும்...

எங்களுடைய பகுதிகளில் உள்ள மீனவ சமுதாயத்தினர் பலர் தங்களையும் பழங்குடி மக்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். கடலை மட்டுமே நம்பி வாழக்கூடிய மீனவர் சமுதாயத்தினர், இன்னமும் சமூக, பொருளாதார கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். அவர்களையும் முன்னேற்றப்படுத்தும் வகையில் அவர்களுக்கான உரிமைகள் இட ஒதுக்கீடுகளை பெறும் வகையில் பழங்குடியின பட்டியலில் அவர்களை சேர்க்க வேண்டும்.

இதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். ஒருபுறம் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக மாற்றும் பணியை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போது அங்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும். எனவே, அரசு பட்டியலின மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வண்ணம் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story