இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ் குமார். எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ் குமார். எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புயல் சின்னம்
வங்கக்கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி உள்ளது. இதனால் இன்றும், நாளையும் டெல்டா மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீன்பிடிக்க செல்லக்கூடாது
புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று(புதன்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது.
மேலும் மீனவர்கள் தங்கள் படகுகளையும், உடைமைகளையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.