இயற்கை சீற்றத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பு- மீனவர்கள்
இயற்கை சீற்றத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பு என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 350 விசைப்படகுகள், 400 பைபர் படகுகள், 200 நாட்டுப்படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடந்த 3 நாட்களாக இந்த பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.இது குறித்து விசைப்படகு உரிமையாளர்கள் கூறுகையில். வங்கக் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதில் இருந்தே கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுகிறது. எங்களுடைய விசைப்படகுகளை துறைமுகத்தில் உள்ள படகு அணையும் தளத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளோம். இங்கு படகுகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பக்கிங்காம் கால்வாயிலும் ஏராளமான படகுகளை நிறுத்தி வைத்துள்ளோம். மீன் வரத்து அதிகமாக இருந்த நேரத்தில் இயற்கை சீற்றத்தால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது' என்றனர்.