மீன்பிடி திருவிழா


மீன்பிடி திருவிழா
x

எஸ். புதூர் அருகே கட்டுகுடிபட்டியில் உள்ள பிரமன் ஊருணியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ். புதூர் அருகே கட்டுகுடிபட்டியில் உள்ள பிரமன் ஊருணியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் சாமி கும்பிட்டு கொடியசைத்ததை தொடர்ந்து ஊருணி சுற்றி காத்திருந்த மக்கள் ஆர்வமுடன் அதில் இறங்கினர். ஊருணியில் ஊத்தா, வலை, கச்சா ஆகியவற்றை பயன்படுத்தி கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். பின்னர் பிடித்த மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்று மீன்குழம்பு செய்து சமையல் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.


Related Tags :
Next Story