மீன்பிடி திருவிழா


மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அடுத்த மதுராபுரி ஊராட் எம்.கோவில்பட்டியில் உள்ள தாயில் கண்மாயில் மீன்பிடிதிருவிழா நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அடுத்த மதுராபுரி ஊராட் எம்.கோவில்பட்டியில் உள்ள தாயில் கண்மாயில் மீன்பிடிதிருவிழா நடந்தது. முன்னதாக கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து கண்மாய் கரையில் நின்று பச்சைக்கொடி காட்டினர்.

பின்னர் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கண்மாய்க்குள் சென்று பலவகை வலைகளை கொண்டு மீன்களை பிடிக்க தொடங்கினர். சிங்கம்புணரி, சிவபுரிபட்டி, வேங்கைபட்டி, தேனம்மாள்பட்டி, வையாபுரிபட்டி, ஆலம்பட்டி பிரான்மலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கண்மாயில் இறங்கி மீன்பிடித்தனர். இதில் கட்லா, லோகு, சிசி, ஜிலேபி, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட மீன் வகைகள் வலையில் சிக்கின. பெரிய அளவில் விரால் மீன்கள் கிடைத்ததில் மீன்பிடியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story