மீன்பிடி திருவிழா
கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது
மதுரை
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையடுத்து அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்மாய்க்கு வர தொடங்கினர். பின் ஊர் பெரியவர்கள் வெள்ளை வீசியதை தொடர்ந்து தயாராக நின்றிருந்த பொதுமக்கள் வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்துச் சென்றனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, ரோகு, விரால், குரவை உள்ளிட்ட மீன்களை பிடித்தனர்.இங்கு பிடிப்பட்ட மீன்களை விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.இது போன்ற மீன்பிடி விழா நடத்துவதால் மீண்டும் கண்மாய் நிறைந்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story