மீன்பிடி திருவிழா


மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதிபட்டி ஊராட்சியில் உள்ள பெரிய மருதி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதிபட்டி ஊராட்சியில் உள்ள பெரிய மருதி கண்மாய் தண்ணீரை பயன்படுத்தி பல ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கியதை தொடர்ந்து தண்ணீர் வற்றி வருவதால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளைக்கொடி காட்டியவுடன் கரையை சுற்றி நின்ற மருதிபட்டி, அரளிப்பட்டி, சிலநீர்பட்டி, திருக்களாப்பட்டி, எஸ்.வி.மங்கலம், வையாபுரிபட்டி, தேனம்மாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்மாய்க்குள் இறங்கி பல்வேறு வலைகளை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர். இதில் கட்லா, ஜிலேபி, லோகு, கொண்டை பொடி, வீரா போன்ற மீன்கள் கிடைத்தது. அவற்றை வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர்.


Next Story