பெரியகாரை கிராமத்தில் மீன்பிடி திருவிழா


பெரியகாரை கிராமத்தில் மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகாரை கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது

சிவகங்கை

தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் கண்மாயில் தேங்கி இருந்த தண்ணீர் தற்போது நீர் அளவு குறைந்த தால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதலில் பெரியகாரை கிராம மக்கள் வீடுகளுக்கு தகவல் தெரிவித்து மேலும் சுற்றுப்புற கிராமங்களுக்கு மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக அறிவித்தனர். நேற்று அதிகாலை முதலே பெரியகாரை கிராமத்தை சுற்றியுள்ள பணங்காட்டான்வயல், கள்ளிக்குடி, கோட்டவயல், நயினார்வயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கச்சா, வாலி, கூடையுடன் வந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து கிராம முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் நின்று வெள்ளைக்கொடி வீசியவுடன் மீன்பிடிக்க தயாராக இருந்தவர்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடிக்க தொடங்கினர்.

இதில் விரால், கெளுத்தி, கட்லா, கெண்டை போன்ற மீன்கள் சிக்கியது. ஒரு சில மீன்கள் 2 கிலோ அளவிலும் மேலும் அனைவருக்கும் போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுபோன்ற மீன் பிடி திருவிழாவால் விவசாயம் செழித்து கிராம மக்களின் ஒற்றுமை வளரும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த மீன்பிடி திருவிழாவால் சுற்றுவட்டார பகுதி கிராமங்களின் வீடுகளில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.


Next Story