2 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா
2 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை
பொன்னமராவதி அருகே கருகப்பூலாம்பட்டியில் உள்ள ஏனாதி கண்மாய், மனப்பட்டி கண்மாய் உள்பட 2 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் நாட்டாண்மை கண்மாய் கரையில் தேங்காய் உடைத்து பூஜை செய்து வெள்ளை துண்டு வீசிய பின்பு ஏராளமான பொதுமக்கள் ஒன்றிணைந்து கண்மாயில் இறங்கினர். பின்னர் ஊத்த, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கெண்டை, கெளுத்தி, கட்லா, விரால் உள்ளிட்ட பலவகை மீன்களை ஏராளமான பொதுமக்கள் பிடித்து சென்றனர்.
பின்னர் தங்களுக்கு கிடைத்த மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story