ஏரியில் மீன்பிடி திருவிழா


ஏரியில் மீன்பிடி திருவிழா
x

ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

திருச்சி

வாத்தலை அருகே நெய்வேலி கிராமத்தில் சுமார் 145 ஏக்கர் பரப்பளவில் நெய்வேலி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் கொல்லிமலையில் இருந்து திருத்தலையூர் ஏரி வழியாக நீர்வரத்து வந்தடையும். ஏரியில் தண்ணீர் வற்றும் தருவாயில் அக்கம் பக்கத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஒன்றிணைந்து மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி நெய்வேலி ஏரியில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கிராம தெய்வமான பூவாயி அம்மனை வழிபட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மீன் பிடிக்கத் தொடங்கினர். உற்சாகத்துடன் ஏரியில் இறங்கிய பொதுமக்கள் சுருக்குமடி வலை, மிதவை இழு வலை, ஓடு கயிறு வலை மற்றும் குத்தீட்டி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி போட்டி போட்டு மீன்பிடித்தனர். இதில் விரால், கெண்டை, ஜிலேபி உள்பட பல்வேறு வகையான மீன்கள் வலையில் சிக்கியது. மேலும் 5 முதல் 8 கிலோ அளவுள்ள பெரிய மீன்களும் பொதுமக்கள் வலையில் சிக்கியது.


Next Story