கரை ஒதுங்கும் கரும்பு பாசிகளால் மீன்வரத்து குறைவு


கரை ஒதுங்கும் கரும்பு பாசிகளால் மீன்வரத்து குறைவு
x

கரை ஒதுங்கும் கரும்பு பாசிகளால் மீன்வரத்து குறைவு

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசுவதால் கரை ஒதுங்கும் கரும்பு பாசிகளால் மீன்வரத்து குறைந்துள்ளது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கரை ஒதுங்கும் கரும்பு பாசிகள்

அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்திநகர், தரகர் தெரு, ஆறுமுக கிட்டங்கி தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் கரும்பு பாசிகள் கரை ஒதுங்கி வருகிறது. இதையடுத்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் வலையில் மீன் பிடிக்கும் போது மிதந்துவரும் கரும்புபாசி மீனவர்கள் வலைகளில் சிக்கிக்கொள்வதால் மீன்வரத்து குறைகிறது.

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடந்த 1 வாரமாக அதிவேக காற்று வீசுவதால் கடல் நீரோட்டத்தில் உவர் நீரில் உள்ள தாவரங்களான கரும்பு பாசி, கடல் பாசி, கடல் தாழைகள் உள்ளிட்ட தாவரங்கள் அலையின் சீற்றத்தில் அடித்து கொண்டு கடல் முழுவதும் மிதந்து வருகிறது. மிதந்துவரும் பாசிகள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் வலையில் சிக்கிக்கொள்கிறது. இதனால் மீனவர்கள் வலையில் மீன்கள் அதிகளவில் சிக்குவது இல்லை. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மீன்வரத்து குறைவு

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில்,

கடலுக்கு அடியில் பவள பாறைகள், பாசிகள், புல்கள் என பலவகையான தாவர கூட்டங்கள் உள்ளன. இதில் கரும்பு பாசி அதிகமாக அதிராம்பட்டினம் கடல் பகுதியில் காணப்படுகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடல் பாசிகள் அலைகளின் வேகத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் கரும்பு பாசிகள் அடித்து கொண்டு கடல் ஓரங்களில் பசுமையாக படிந்துள்ளது. இதனையடுத்து கரும்புபாசி கடல் முழுவதும் மிதந்து வருவதால் கடலில் மீன்களுக்காக விரிக்கும் வலையில் கரும்பு பாசி சிக்கி வலையின் துவாரக்கண்களை அடைத்துவிடுகிறது. இதனால் மீன்கள் அகப்படுவது அரிதாகிவிடுகிறது. இதனால் மீன்வரத்து குறைந்து வருகிறது என்றனர்.


Related Tags :
Next Story