மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி வலைகள், பரிசல்கள்
மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி வலைகள், பரிசல்கள் வழங்கப்படுவதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
உள்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவர்கள், மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் காட்பாடி காந்திநகர், 5-வது மேற்கு குறுக்குத்தெருவில் உள்ள வேலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை adfifvellorel@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ அல்லது நேரிலோ அணுகி தேவையான விவரங்களை பெற்று பயன் பெறலாம்.
இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story