குட்டைபோல் தேங்கிய மழைநீரில்பொதுமக்கள் மீன்பிடிக்கும் போராட்டம்
எலச்சிபாளையத்தில் கிறிஸ்தவ ஆலயம் முன்பு குட்டைபோல் தேங்கிய மழைநீரில் பொதுமக்கள் மீன்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்
திருச்செங்கோடு
எலச்சிபாளையத்தில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லக்கூடிய நெடுஞ்சாலை சுமார் 7 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சின்ன எலச்சிபாளையம் கிறிஸ்தவ ஆலயம் முன்பு மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் திருச்செங்கோடு நெடுஞ்சாலை துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால் இப்பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளாத நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மீன் பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story