விபத்தில் மீன் வியாபாரி படுகாயம்


விபத்தில் மீன் வியாபாரி படுகாயம்
x

விபத்தில் மீன் வியாபாரி படுகாயம் அடைந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 53), மீன் வியாபாரி. இவர், மீன் வாங்குவதற்காக வழக்கம்போல் கல்லாத்தூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சின்னத்தம்பியை அருகே இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


Next Story