சாத்தூரில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி


சாத்தூரில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி
x

சாத்தூரில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் புனித தனிஸ்லாஸ் மேல்நிலைப்பள்ளியில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, தேனி, நாகர்கோவில், கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் சிவகாசி அணியினர் முதல் பரிசையும், நாகர்கோவில் அணியினர் 2-வது பரிசையும், விருதுநகர் அணியினர் 3-வது பரிசையும் வென்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஆர்சி யூத் கால்பந்தாட்ட கழகத்தினர் செய்திருந்தனர்.


Next Story