அரசு உயர்நிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா
அரசு உயர்நிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா நடந்தது
தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, நூலகம் திறப்புவிழா, மரக்கன்றுகள் நடும் விழா, முன்னாள் மாணவர் மன்றத் தலைவர் பதவியேற்பு விழா, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேவகோட்டை தாசில்தார் செல்வராணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் பசுமை மீட்பு பேரியக்கம் ஒருங்கிணைப்பாளர் அற்புதராஜ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பெரியசாமி பதவியேற்றுக் கொண்டார். இதில் மனித உரிமை கழக கவுன்சில் மாநில இணைச் செயலாளர் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. துரைமாணிக்கம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜோசப், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் தேவி, முன்னாள் மாணவர்கள் ஆனந்த், தர்மராஜ், புரவலர் சூசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.