தூயஇருதய தேவாலயத்தில் கொடியேற்றம்


தூயஇருதய தேவாலயத்தில் கொடியேற்றம்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை தூய இருதய தேவாலயத்தின் தேர் பவனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை தூய இருதய தேவாலயத்தின் தேர் பவனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூய இருதய தேவாலயம்

வால்பாறையில் தூயஇருதய தேவாலயம் உள்ளது. இந்த ஆலய தேர்த்திருவிழா வருகிற 21-ந் தேதி நடைபெகிறது. இதையொட்டி ஆலய பங்கு குருக்கள் ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் பீட்டர் தலைமையில் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றி சிறப்பு ஜெபவழிபாடு நடத்தப்பட்டது.

தேர்த்திருவிழா கொடி ஆலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. பின்னர் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மந்திரித்து ஆலய பங்கு குரு ஜெகன் ஆண்டனி கொடியை ஏற்றி வைத்தார்.

திருப்பலி

வருகிற 19 -ந் தேதி மாலை 5.30 மணிக்கு கொடிவேரி பங்கு குரு மேத்யூஜுட்பால் தலைமையில் பாடல் திருப்பலி, மறையுரை, சிறப்பு நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. 20-ந் தேதி மேட்டுப்பாளையம் பங்கு குரு ஹென்றி லாரன்ஸ் தலைமையில் பாடல் திருப்பலி, மறையுரை சிறப்பு நற்கருணை ஆசியோடு புனித செபஸ்தியார் வேண்டுதல் தேர் ஆலயத்தை சுற்றி எடுக்கப்படுகிறது.

21-ந் தேதி காலை 7.30 மணிக்கு வாழைத் தோட்டம் புனித செபஸ்தியார் சிற்றாலயத்தில் சிறப்பு திருவிழா, கூட்டு பாடல் திருப்பலி, ஜெபவழிபாடு நடைபெறுகிறது.

தேர் பவனி

அதைத்தொடர்ந்து தூய இருதய பங்கு ஆலயத்தில் இருந்து பங்கு மக்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் அம்பு நேர்ச்சை பவனி நடைபெறுகிறது.

அன்று மாலை 5.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் கூட்டு பாடல் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு தூய இருதய ஆண்டவர், புனித செபஸ்தியார் திருவுருவம் தாங்கிய தேர்பவனி நடைபெறுகிறது. வால்பாறை பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடைபெறுகிறது.

22-ந் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டு பாடல் திருப்பலி, ஆலயத்தை சுற்றி அம்பு நேர்ச்சை, மதியம் 12 மணிக்கு நன்றியின் நற்கருணை ஆசீர் வழிபாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்கு குருக்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story