அ.தி.மு.க. கொடி ஏற்று விழா
பாலக்கோடு அருகே அ.தி.மு.க. கொடி ஏற்று விழா நடந்தது.
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே திம்லாமேடு கிராமத்தில் அ.தி.மு.க. கொடி ஏற்று விழா நடந்தது. இதில் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் பாலக்கோடு தொகுதியில் 22 ஆண்டுகளாக தொடர்ந்து கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.வாக இருந்து வருவதை கொண்டாடும் வகையில் நிர்வாகிகள், தொண்டர்கள் 22 கிலோ கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் செந்தில், கோபால், நகர செயலாளர் ராஜா, ஊராட்சி ஒன்றிய துணை செயலாளர் அண்ணாமலை, கிளை செயலாளர் ராஜா, ஊராட்சி தலைவர் சுப்ரமணி, முன்னாள் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story