கொடியேற்று விழா


கொடியேற்று விழா
x

நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி கொடியேற்று விழா நடந்தது

திருநெல்வேலி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு விழாவையொட்டி, நெல்லை டவுன் சந்தி விநாயகர் கோவில் அருகில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் நட்சத்திர வெற்றி தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர், நெல்லை சட்டமன்ற தொகுதி செயலாளர் அழகேசன், மாவட்ட பொருளாளர் ஆனந்த், துணைத்தலைவர் வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி சரத் கண்ணன், பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பாளையங்கோட்டையில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நெல்லை மாநகர பகுதியில் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1 More update

Next Story