சோழபுரீஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம்


சோழபுரீஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம்
x

சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள சோழபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு சோழபுரீஸ்வரர், கனககுஜம்பாள், கங்காதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் கொடிமரத்துக்கு கலசபுனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை செய்து நந்தி திருவுருவம் படத்துடன் கொடியேற்றப்பட்டு பிரமோற்சவம் தொடங்கியது.

உற்சவ சுவாமிக்கும், கொடிமரத்திற்க்கும் கும்ப தீபாராதனை நடைபெற்றது. உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் தனித்தனி வாகனத்தில் சோழபுரீஸ்வரர், கனககுஜம்பாள், கங்காதேவி சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். வருகிற 30-ந் தேதி அன்று தேர்திருவிழா நடைபெறுகிறது.


Next Story