3 விமானங்கள் தாமதம்


3 விமானங்கள் தாமதம்
x

மதுரையில் மழையால் 3 விமானங்கள் தாமதமாக வந்தன.

மதுரை


மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் சென்னையில் இருந்து 6 மணிக்கு மதுரை வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்காமல் வானில் வட்டமடிக்க தொடங்கியது. இதனை அடுத்து ஐதராபாத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு வந்த விமானமும் வானிலை சரி இல்லாததால் தரையிறங்காமல் வானில் வட்டம் அடித்தது. இதுபோல் 6.40 மணிக்கு பெங்களூரில் இருந்து வந்த விமானமும் வானிலை காரமாக தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இந்த 3 விமானங்களும் விமான நிலையத்தை சுற்றி வானில் வட்டமிட்டபடியே இருந்தது. இந்த நிலையில் வானிலை சீரான உடன் சென்னை விமானம் 1 மணி நேரம் தாமதமாக 7 மணிக்கு தரை இறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஐதராபாத் விமானம் 50 நிமிடம் தாமதமாகவும், பெங்களூரு விமானம் 30 நிமிடம் தாமதமாகவும் அடுத்தடுத்து தரையிறங்கியது.

1 More update

Next Story