கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு


கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
x

ஆரணியில் கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், அமிர்தி வனப்பகுதியிலும், ஜவ்வாதுமலை தொடர்ச்சியிலும் கடந்த வாரம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக நாகநதி ஆற்றிலும், கமண்டல நாகநதி ஆற்றிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக குன்னத்தூர், சேவூர், காமக்கூர், களம்பூர், சம்புவராயநல்லூர், அக்ராபாளையம், இரும்பேடு, பனையூர், மட்டதாரி உள்பட பல ஏரிகளுக்கு பாசன கால்வாய் மூலமாக தண்ணீர் செல்கிறது.

ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் சேவூர் பைபாஸ் சாலையில் தடுப்பணையை மீறியும், பையூர் அருகே சுபான்ராவ்பேட்டை பகுதியில் உள்ள தடுப்பணைகளிலும் உபரிநீர் வழிந்தோடி செல்கிறது.

இதனால் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் ஆற்றுதண்ணீரில் குளித்து வருகின்றனர். ஒரு சிலர் மீன் பிடிக்கின்றனர்.

ஆற்றுப்பகுதி முழுவதுமே நாணல் செடி, முள்செடிகள் அதிக அளவில் வளர்ந்து காடு போல காட்சி அளிக்கிறது இதனால் தண்ணீர் ஆற்றில் செல்வது வெளியே தெரியாத அளவிற்கு உள்ளது.

ஆகவே ஆற்றுப்பகுதியில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story