பலத்த மழையால் சென்னைக்கு அனுப்பப்பட்ட விமானம்


பலத்த மழையால் சென்னைக்கு அனுப்பப்பட்ட விமானம்
x
தினத்தந்தி 29 May 2022 8:16 PM GMT (Updated: 29 May 2022 8:54 PM GMT)

பலத்த மழையால் விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு நிறுவனங்களின் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து 181 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று மாலை 6.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது திருச்சி விமான நிலைய பகுதியில் பலத்த மழை பெய்ததால், அந்த விமானம் திருச்சியில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் பயணிகள் சிரமமடைந்தனர். பின்னர் மீண்டும் அந்த விமானம் ெசன்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இரவு 9.40 மணிக்கு வந்தடைந்தது.


Next Story