10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படம் இயக்குகிறேன்


10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படம் இயக்குகிறேன்
x

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படம் இயக்குகிறேன் என்று ராமநாதபுரத்தில் நடிகர் சசிகுமார் பேட்டி அளித்தார்.

ராமநாதபுரம்


நடிகர் சசிகுமார் நடித்த காரி திரைப்படம் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை ராமநாதபுரத்தை சேர்ந்த ஹேமந்த்குமார் இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் ஹேமந்த் குமார், நடிகர் சசிகுமார், வில்லன் நடிகர் அருண்மொழித்தேவன் ஆகியோர் நேற்று ராமநாதபுரம் காரி திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை நேரில் சந்தித்தனர். இதைதொடர்ந்து நடிகர் சசிகுமார் கூறியதாவது:- ஈசன் படத்திற்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் திரைப்படத்தை இயக்க உள்ளேன். வருகிற மார்ச் மாதம் பூஜை போட்டு படத்தை தொடங்க உள்ளேன். ராமநாதபுரத்தை சேர்ந்த இயக்குனர் ஹேமந்த் குமார் இயக்கிய காரி திரைப்படம் தமிழகம் முழுவதும் தற்போது வெளியாகி உள்ளது. இது ஜல்லிக்கட்டு பற்றிய ஒரு சிறந்த படம். நம்முடைய கலாசாரத்தை வெளிப்படுத்தும் திரைப்படங்களை மக்கள் விரும்பி பார்ப்பார்கள். அதனால் இந்த திரைப்படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இயக்குனர் இந்த ஊரைச் சேர்ந்தவர் வில்லன் நடிகரும் இந்த ஊரை சேர்ந்தவர்தான். முழு நேர நடிகராக படங்களில் நடித்து வந்தேன். நீண்ட இடைவெளிக்குபின் விரைவில் அடுத்த திரைப்படத்தை இயக்குகிறேன். மார்ச் மாதம் அதற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. இன்னும் பெயரிடப்படவில்லை. திரைப்படத்தை இயக்குவது நடிப்பது இரண்டுமே எனக்கு திருப்தி தருகிறது. தற்போது 3 படங்களில் நடித்து வருகிறேன். அயோத்தி என்ற படம் தற்போது வெளிவர தயாராக உள்ளது. இவ்வாறு கூறினார்.


Next Story