காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது: கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைப்பு


காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஈரோடு

ஈரோடு

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரத்து 350 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

350 பேர்

சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பெய்யும் மழைநீரும் காவிரி ஆற்றில் கலந்து வருவதால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. எனவே காவிரி ஆற்றங்கரையோரமாக உள்ள மக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம், லக்காபுரம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. எனவே 9 இடங்களில் உள்ள முகாம்களில் சுமார் 350 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தண்ணீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.


Next Story