கனமழை எதிரொலி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 7,129 கனஅடி நீர் திறப்பு-5 மாவட்டங்களுக்கு, 3-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை


கனமழை எதிரொலி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 7,129 கனஅடி நீர் திறப்பு-5 மாவட்டங்களுக்கு, 3-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
x

கன மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 7,129 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களுக்கு 3-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கன மழை

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதே போல கர்நாடக மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரும், தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையாலும் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

குறிப்பாக நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 869 கனஅடியாக இருந்தது. நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 129 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 428 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 49.25 அடியாக உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

அணையின் பாதுகாப்பின் கருதி சிறிய மற்றும் பிரதான மதகுகள் வழியாக வினாடிக்கு 7 ஆயிரத்து 428 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story