கடம்பூர் அருகே சேறு, சகதி காரணமாக காட்டாற்றை பஸ் கடக்க முடியாததால் போக்குவரத்து பாதிப்பு- ஆபத்தை உணராமல் வெள்ளத்தை கடந்து செல்லும் மாணவ, மாணவிகள்


கடம்பூர் அருகே சேறு, சகதி காரணமாக காட்டாற்றை பஸ் கடக்க முடியாததால் போக்குவரத்து பாதிப்பு- ஆபத்தை உணராமல் வெள்ளத்தை கடந்து செல்லும் மாணவ, மாணவிகள்
x

கடம்பூர் அருகே சேறு, சகதி காரணமாக காட்டாற்றை பஸ் கடக்க முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் வெள்ளத்தை கடந்து செல்கின்றனர்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் அருகே சேறு, சகதி காரணமாக காட்டாற்றை பஸ் கடக்க முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் வெள்ளத்தை கடந்து செல்கின்றனர்.

சேறு- சகதி

டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாக்கம்பாளையத்துக்கு செல்லும் வனச்சாலை சேறும், சகதியுமாக இருக்கிறது.

மேலும் மாக்கம்பாளையத்துக்கு செல்லும் வழியில் உள்ள சர்க்கரை பள்ளம், குரும்பூர் பள்ளம் ஆகிய பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் காட்டாறுகளிலும் சேறு மற்றும் சகதி அதிக அளவில் படிந்து உள்ளது.

ஆபத்தை உணராமல்...

இதனால் அரசு பஸ் சர்க்கரை பள்ளம் வரை சென்றுவிட்டு பயணிகளை இறக்கி விட்டு அங்கிருந்து திரும்பி சென்றுவிடுகிறது. இதனால் மாக்கம்பாளையம், கோம்பையூர், கோம்பை தொட்டி மலைவாழ் மக்கள் தங்களுடைய கிராமங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். வெள்ள நீர் காட்டாற்றில் வடிந்த பிறகு குழந்தைகளை தலையில் தூக்கி வைத்தபடி காட்டாற்றை கடக்கிறார்கள். இதேபோல் ஆபத்தை உணராமல் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளும் ஒருவரை ஒருவர் கைகோர்த்தபடி காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்கிறார்கள்.

மலைவாழ் மக்கள் நலன் கருதி குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள காட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story