வெள்ளத்தடுப்பு, மீட்பு ஒத்திகை


வெள்ளத்தடுப்பு, மீட்பு ஒத்திகை
x

பாகவெளி ஊராட்சியில் வெள்ளத்தடுப்பு, மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கத்தை அடுத்த பாகவெளி ஊராட்சியில் மழை காலங்களில் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் பொதுமக்களை காப்பாற்றுவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு, உள்ளாட்சித் துறை, போக்குவரத்து, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் வெள்ளத்தடுப்பு மற்றும் மீட்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஏரியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பு குழுவினர் படகில் சென்று மீட்டு, முதல் உதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆஸ்பத்திரிக்கு அனுப்புவது போன்ற நிகழ்வுகளை செய்து காண்பித்தனர்.

இதனை அடுத்து கிராம சேவை மையத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டறிந்து அவர்களுக்கு இலவச வேட்டி சேலை, உணவு வழங்குவதையும் பார்வையிட்டார். வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, தாசில்தார் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் ராமு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story