காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை - விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர்


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை - விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர்
x
தினத்தந்தி 30 Aug 2022 12:54 PM GMT (Updated: 30 Aug 2022 12:55 PM GMT)

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களின் 3 குழுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட விரைந்தனர்

அரக்கோணம்:

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அதிகப்படியான நீர் திறப்பால் ஈரோடு, நாமக்கல் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, நாமக்கல் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ள முன்னெச்சரிக்கை மீட்பு பணிகளில் ஈடுபட அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திலிருந்து அதி நவீன மீட்பு கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன் தலா 25 வீரர்கள் 3 குழுக்கள் மீட்பு படை வாகனத்தில் சென்றனர்.


Next Story