மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளநீர் - நோயாளிகள் அவதி


மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளநீர் - நோயாளிகள் அவதி
x

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழைநீர் புகுந்து ஆறாக ஓடியது.

தேனி,

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்ததால் நோயாளிகள் பெரும் சிரமம் அடைந்தனர். தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான போடி, பெரியகுளம், கம்பம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது.

இந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழைநீர் புகுந்து ஆறாக ஓடியது. முதியோர் உள்நோயாளிகள் பிரிவு, மத்திய ஆய்வக பிரிவு ஆகிய பகுதிகளிலும் மழைநீர் தேங்கியதால் உள் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

1 More update

Next Story