குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை....!


குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை....!
x

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடைவிதிக்கப்பட்டது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு பெய்த பலத்த மழையினால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.

இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் இன்று மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடைவிதிக்கப்பட்டது. சுற்றுலா பணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story