கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; 5-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை


கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; 5-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
x

வெள்ளப்பெருக்கு குறையாததால் தொடர்ந்து 5-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து கிடைக்கிறது. தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக கும்பக்கரை அருவி விளங்குகிறது.

இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு குறையாததால் தொடர்ந்து 5-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story