மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு


மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
x

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், மணிமுத்தாறு அணைக்கு நீராதாரமாக விளங்கும் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட தேயிலைத்தோட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று காலையில் மணிமுத்தாறு அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். எனினும் அருவியை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் அதை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Next Story