குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு


குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
x

தொடர்ந்து பெய்து மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தொடர்ந்து பெய்து மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர் மழை

பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் முழுகொள்ளளவை எட்டி உள்ளது. இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

வினாடிக்கு 1100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 1100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

வெள்ளப்பெருக்கு

வனப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்று நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் நீர்வரத்தை பொறுத்து இன்று (வெள்ளிக்கிழமை) சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி பெய்த மழைஅளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

சோலையார் 77, பரம்பிக்குளம் 37, ஆழியாறு 48, திருமூர்த்தி 17, வால்பாறை 29, மேல்நீராறு 33, கீழ்நீராறு 24, காடம்பாறை 31, சர்க்கார்பதி 83, வேட்டைக்காரன்புதூர் 62.6, தூணக்கடவு 56, பெருவாரிபள்ளம் 38, அப்பர் ஆழியாறு 6, பொள்ளாச்சி 17, நல்லாறு 12.


Next Story