சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 5 Nov 2023 10:43 AM IST (Updated: 5 Nov 2023 11:40 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. சுற்றுலா தளமாகவும், புனித தளமாகவும் விளங்கும் இந்த சுருளி அருவிக்கு ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்த அருவியில் குளிப்பதற்காக தினமும் தேனி மட்டுமின்றி, பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் மற்றும் பக்தர்கள் புனித நீராடவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

1 More update

Next Story