சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு;  சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

தொடர் மழை எதிரொலியாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தேனி

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக உத்தமபாளையம் அருகே உள்ள சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்தநிலையில் நேற்று ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சுருவியில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக வனத்துறை சார்பில் அருவிக்கு செல்லும் பாதையில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுருளி ஆற்றங்கரை பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story