தேனி சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு; 6-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை


தேனி சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு; 6-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
x

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. சுற்றுலா தளமாகவும், புனித தளமாகவும் விளங்கும் இந்த சுருளி அருவிக்கு ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்த அருவியில் குளிப்பதற்காக தினமும் தேனி மட்டுமின்றி, பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பக்தர்கள் புனித நீராடவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


Next Story