கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - படகில் சென்று பார்வையிட்ட சீர்காழி எம்எல்ஏ


கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - படகில் சென்று பார்வையிட்ட சீர்காழி எம்எல்ஏ
x

கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களை சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் படகில் சென்று பார்வையிட்டடார்.

கொள்ளிடம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் செல்லும் வெள்ள நீர் கடலூர் மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கொள்ளிடம் ஆறு சென்று கொண்டிருப்பதால் இரண்டு கரைகளையும் தொட்டப்படி வெள்ள நீர்பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது.

தொடர்ந்து வெள்ள நீர் அதிகரித்து வருவதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள ஆற்றங்கரை தெரு, ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலை மேடு உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இந்த பகுதிகளை சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றிகுழ தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தண்ணீர் சூழ்ந்துள்ள வீடுகளையும், பயிர்களையும் பார்வையிட்ட அவர் அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினார்கள்.


Next Story