நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கியது


நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கியது
x

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிங்காநல்லூர்-வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது

கோயம்புத்தூர்

கோவை

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிங்காநல்லூர்-வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தரைப்பாலம் மூழ்கியது

கோவையில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்கிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குளங்க ளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். கோவையில் பல இடங்க ளில் நேற்று அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

போக்குவரத்து நிறுத்தம்

இதன் காரணமாக வெள்ளலூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர். நேரம் செல்ல செல்ல ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் வெள்ளலூர் தரைப் பாலம் வழியாக செல்லும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட் டது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ் ணன் போலீசாருடன் அங்கு சென்று ஆய்வு செய்தார். அவர், தரைப்பாலம் மூழ்கிய நிலையில், மாற்று வழியில் வாகனங்களை திருப்பி விடுமாறு அறிவுறுத்தினார்.

நிரந்தர தீர்வு

வெள்ளலூர் சாலையில் போக்குவரத்து தடைபட்டதால், வாக னங்களில் செல்பவர்கள் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட் டது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, தரைப் பாலத் துக்கு பதிலாக மேம்பாலம் அமைக்க வேண்டும்.

அப்போது மழை காலங்களில் பாதிப்பு இன்றி வாகன ஓட்டுனர் கள் செல்ல முடியும். இந்த பிரச்சினைக்கு விரைவாக நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

இதற்கிடையே மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் அதிகாரிகளும் தரைப்பாலம் மூழ்கிய பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

இரும்பு பாலம்

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறும் போது வெள்ளலூர் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங் கப்பட்டு உள்ளது. அந்த பணி முழுமை அடையும் வரை தற்காலி கமாக இரும்பு பாலம் அமைக்கப்படும். மேலும் அங்கு போக்குவரத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

1 More update

Next Story