பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் ஆலோசனை


பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் ஆலோசனை
x

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வேலூர்

பொன்னை

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டம்

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த கலவகுண்டா அணையில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொன்னை சமுதாயக்கூடத்தில் நடந்தது.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரகு, நந்தகுமார், துணை தாசில்தார் முகமது சாதிக் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள்கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

அரசு பள்ளிகளில்

கிராமங்களில் மழை வெள்ள பாதிப்புகள், வீடுகள், சாலைகள் சேதம் மற்றும் விளைநிலங்கள் பாதிப்படையாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோரம் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களை அரசு பள்ளிகள் மற்றும் கோவில்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகள் பாதிப்புகளை தடுக்க கால்நடை துறையினர் தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டும். பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில் காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், பொன்னை வார்டு கவுன்சிலர்கள் ரவி, நதியா பவுல், கவிதா, மூர்த்தி, பொன்னை ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story