தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x

தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் பகுதிகளில் தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் போன்றவை வைத்து வியாபாரம் செய்வதற்கான வாடகையை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த வாடகை உயர்வை உடனடியாக செலுத்த கும்பகோணம் பகுதியில் உள்ள தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளை நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வந்தது. இதையடுத்து தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் உயர்த்தப்பட்ட வாடகையை நகராட்சி நிர்வாகம் திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் அருகே உள்ள கும்பகோணம் தஞ்சை மெயின் சாலையில் 50-க்கும் மேற்பட்ட தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் வாடகை உயர்வை திரும்ப பெற நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வாடகை உயர்வை திரும்ப பெறுவது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story