அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கலாம் குடும்பத்தினர், கலெக்டர் உள்பட ஏராளமாேனார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைெயாட்டி மாணவர்களின் சிலம்ப சாதனை நிகழ்ச்சியும் நடந்தது.
ராமேசுவரம்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கலாம் குடும்பத்தினர், கலெக்டர் உள்பட ஏராளமாேனார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைெயாட்டி மாணவர்களின் சிலம்ப சாதனை நிகழ்ச்சியும் நடந்தது.
அப்துல்கலாம் நினைவு தினம்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதைெயாட்டி ராமேசுவரம் பேய்க்கரும்பில் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள, கலாம் நினைவிடத்தில் நேற்று காலை 9 மணிக்கு கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவுது, ஷேக் சலீம், நிஜாமுதீன் என குடும்பத்தினர் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக கலாம் நினைவிடத்தில் ஆலிம்ஷா சகுபர் சாகிப் தலைமையில் சிறப்பு துவா நடைபெற்றது. ராமேசுவரம் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஆவுல்அன்சாரி, செயலாளர் ஹாத்திப், கலாம் மணிமண்டப பொறுப்பாளர் அன்பழகன், சமூக ஆர்வலர் கராத்தே பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர்-எம்.எல்.ஏ.க்கள்
மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ஐ.என்.எஸ். பருந்து விமான தள கமாண்டர் விக்ராந்த் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர்கான், துணை தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம், பரமக்குடி நகரசபை தலைவர் சேது கருணாநிதி, ராமேசுவரம் முன்னாள் நகரசபை தலைவர் அர்ஜுனன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
மலர் தூவி அஞ்சலி
அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், ராமேசுவரம் நகர செயலாளர் அர்ஜுனன், கவுன்சிலர் பிரபாகரன், பா.ஜனதா சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் முரளீதரன், நகர் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்டோரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அமைப்புச் செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தலைமையில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியதுடன் கலாமின் லட்சியம் நிறைவேற பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதேபோல் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பொதுமக்கள், மாணவர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சாதனை சிலம்ப நிகழ்ச்சி
அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே அப்துல்கலாம் பவுண்டேஷன் மற்றும் ஆறுமுகம் பாரம்பரிய தற்காப்பு மையம் சார்பில் சாதனை சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலை 7.30 மணியில் இருந்து மதியம் 12:30 மணி வரையிலும் இடைவிடாமல் தொடர்ச்சியாக 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். அவர்களுக்கு காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
அதுபோல் ராமேசுவரம் வர்த்தினி மகாலில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பவுண்டேசன் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு, அறிவியல், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் சாதித்த 7 பேருக்கு கலாம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மற்றும் கலாம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.