என்ஜினீயர் வீட்டில் மலர்ந்த பிரம்ம கமலம் பூ


என்ஜினீயர் வீட்டில் மலர்ந்த பிரம்ம கமலம் பூ
x

பழனியில் என்ஜினீயர் வீட்டில் பிரம்ம கமலம் பூ பூத்தது.

திண்டுக்கல்

பழனி சண்முகாநகரை சேர்ந்தவர் ஹரீஷ். இவர், தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிகிறார். தனது வீட்டில் இவர், பல்வேறு பூச்செடிகளை தொட்டிகளில் நட்டு வைத்து பராமரித்து வருகிறார்.

இதில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் தன்மை கொண்ட பிரம்ம கமலம் செடியும் ஒன்று ஆகும். தற்போது இந்த செடியில் பூ பூத்துள்ளது. இரவில் மலர்ந்து பகலில் வாடும் தன்மை கொண்ட இந்த பூவை, அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.


Related Tags :
Next Story